மஞ்சள் நீராட்டு விழா ஏன் பெண்கள் பருவமடைந்தவுடன் கொண்டாடப்படுகிறது?

மஞ்சள் நீராட்டு விழா ஏன் பெண்கள் பருவமடைந்தவுடன் கொண்டாடப்படுகிறது?


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


       யோகக் கலாச்சாரப்படி "ஆண் " என்றால் "கொடுப்பதையும் " "பெண் " என்றால் "பெறுவதையும் "குறிக்கிறது.

அதன்படி நாம் காணும் இந்த பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் இறைவன் என்னும் ஆணிடமிருந்து உடல், மனம், சூழ்நிலை, சுகதுக்கம் இவற்றைப் பெறும் பெண்களேயாகும்.

                இக்கருதுகோளை அடிப்படையாகக்கொண்டே நம்வாழ்வியலையும் புரிந்துகொள்ளும்படி ஞானிகள் நம் கலாச்சார வாழ்க்கைமுறையை அமைத்துக்கொடுத்தனர்.

அதாவது பெண்கள் ஒரு குடும்பத்தில் தாய், தந்தைக்கு மகளாக பிறந்து சீரும் சிறப்புமாக வளர்ந்து பூப்படைந்து பருவமெய்திய பின்னரே எதிர்பாலினமான ஆண்கள் மீது கவனம் திரும்பி பல உருவ மாறுதல்களையும், குணமாறுதல்களையும் அடைந்து காதல் திருமணமோ சம்பிரதாய திருமணமோ செய்து கொண்டு அதுவரை தான் வளர்ந்த, பிறந்த வீட்டைவிட்டு புகுந்த வீடுசென்று தன் எல்லாவற்றையும் புகுந்தவீட்டிற்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டு பெரும் தியாக வாழ்வை வாழ்கிறாள்.

                                            அவ்வாறே மனித ஜீவாத்மாக்கள்  என்ற பெண்கள் சூரிய குடும்பத்தில் "சூரியன் "என்ற தந்தைக்கும் "பூமி "என்ற தாய்க்கும் மகளாக பிறக்கிறாள்.பின் உணவு சுகதுக்கம்,சூழ்நிலை, சொத்து, பணம் போன்ற விளையாட்டு சாமான்களுடன் சீரும் சிறப்புமாக தன் பிறந்தவீடாகிய பூமிப் பந்தில் சுகமாக வளர்கிறாள்.

பிறகு ஒருநாள் தகுந்த வளர்ச்சி நிலை அடைந்த பிறகு "ஞானம் "எனும் முக்கிமான பூப்பெய்தும் நிலையை அடைகிறாள்.இதையே நம் கலாச்சாரத்தில் "பூப்புனித நீராட்டு விழா " என்று அப்பெண்ணிண் முக்கிய காலகட்டமாக கொண்டாடுகிறார்கள்.

இதைக்குறிக்கவே "புண்ணியம் செய்தோருக்கு பூ உண்டு நீருண்டு " என்று குறிப்பிடுகிறார்கள்.

நம் கலாச்சாரத்தில் "மலர் " "பூ " என்ற வார்த்தைகள் இறைவனைப்பற்றிய ஞானமடைதலைக்குறிக்கிறது (பருவமடைதல்) .

                      "வாக்குண்டாம் நல்ல மனமுன்டாம் மாமலரால் நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு துய்ப்பார் திருமேனி தும்பிக்கை யான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு "என்ற ஔவையார் எனும் பெண்பால் ஞானப்புலவரின் வாக்குகள் மேற்குறிப்பிட்ட கருத்தை நன்கு புலப்படுத்துவதை காணலாம்.

     இதில்வரும் வாக்குண்டாம், நல்ல மனமுன்டாம், மாமலரால் நோக்குண்டாம் என்ற வரிகளுக்கு ஞானம் எனும் மலரால் கணபதியாகிய இறைவனை அடைவதற்கு ஏற்றவாறு நல்ல மனமும் நல்ல சொற்களும் உண்டாகும், இறைவன்மேல் ஒரு காதல் நோக்கமும் உண்டாகும் என்று அர்த்தம்

. பூப்படைந்தவுடன் அதாவது "மஞ்சத்தண்ணீர் " விழாவிற்கு பின் அந்த பெண் தன் சொத்து, வீடு, பணம், இன்பதுன்பம் போன்ற விளையாட்டு சாமான்களையெல்லாம் தூக்கியெறிந்து விட்டு "மேனி நுடங்காமல் "அதாவது எந்த கர்மாவும் செய்யாமல் "சும்மா "இருந்து தன் காதலனாகிய இறைவனையே நினைத்துக்கொண்டிருக்கிறாள்.ஆனால் அந்த பெண்ணை பாசமாக வளர்த்த பூமித்தாய் பல கட்டுபாடுகளை விதிக்கிறாள்.

அனைத்து கட்டுப்பாடும் தன் நன்மைக்கே என உணர்ந்து தன் பழைய விளையாட்டு புத்தியையெல்லாம்விட்டு வெளியே அதிகம் தலைகாட்டாமல் வீட்டின் உள்ளேயே அகமுக நாட்டமாக தன் காதலனாகிய இறைவனையே சிந்தித்தவண்ணமாக வளர்கிறாள்.--நாளை தொடரும்.