கிருஷ்ண பகவான் வணங்கும் ஆறு பேர்
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
கண்ணன் வணங்கும் அந்த ஆறு பேரை நாமும் வணங்கினால் வாழ்வில் அனைத்தும் வளமும் பெறலாம். கிருஷ்ண பகவான் சொன்ன அந்த ஆறுவகையான மக்களின் முழுப் பெருமைகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
மக்கள் அனைவரும் தங்கள் துன்பங்கள் நீங்கவும், நோய் நொடி இல்லாமல் வாழவும், மறுபிறவி இல்லாமல் இறைவனின் திருப்பதத்தை அடையவும் இறைவனை வேண்டுகிறார்கள். ஆனால் இறைவனும் கூட சிலரை வணங்குகிறார் என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா?
ஆம்! திருப்பாற்கடலில் பள்ளி கொண்டபடி, அகிலத்தையே காத்தருளும் திருமாலின் அவதாரமாக விளங்கிய கிருஷ்ண பகவான் ஒரு முறை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தார். இதைக் கண்ட ருக்மணி தேவி, ‘சுவாமி! உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் உங்களை வழிபடுகின் றன. ஆனால் நீங்கள் யாரை வழிபட்டுக் கொண்டிருக் கிறீர்கள்?’ என்று கேட்டார்.
அதற்கு கிருஷ்ண பகவான், ‘நான் இந்தப் பூமியில் வாழும் ஆறு வகையான மக்களை வணங்குகிறேன். நித்யான்ன தாதா (தினமும் அன்னதானம் செய்வோர்), தருணாக்னிஹோத்ரி (தினமும் அக்னி ஹோத்ரம் செய்வோர்), வேதாந்தவித் (வேதாந்தம் அறிந்தவர்கள்), சந்திர சஹஸ்ர தர்சீ (சகஸ்ர சந்திர தரிசனம் செய்தவர்), மாஸோபாவாசீச (மாதம் தோறும் உபவாசம் இருப்பவர்), பதிவ்ரதா (பதிவிரதையான பெண்கள்) ஆகிய ஆறு பேரை நான் வணங்குவேன்.
கண்ணன் வணங்கும் அந்த ஆறு பேரை நாமும் வணங்கினால் வாழ்வில் அனைத்தும் வளமும் பெறலாம். கிருஷ்ண பகவான் சொன்ன அந்த ஆறுவகையான மக்களின் முழுப் பெருமைகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
நித்ய அன்ன தாதா
அந்தக் காலத்தில் ஒருவருக்குக் கிடைக்கும் வருமானத்தில் அல்லது நிலத்தில் அறுவடையாகும் விளைச்சலில் ஆறில் ஒரு பகுதியை மன்னருக்குக் கொடுத்து விட வேண்டும். மீதி ஐந்து பகுதிகளை, அவர் ஐந்து பேரைப் பாதுகாக்கப் (பஞ்ச யக்ஞத்துக்கு) பயன்படுத்தவேண்டும். இதுபற்றி திருவள்ளுவரும் கூட ‘இறந்து போன நம் முன்னோர்கள், கடவுள், வீட்டிற்கு வரும் விருந்தாளி, சுற்றத்தார் (இதில் நாம் வளர்க்கும் பசு முதலிய பிராணிகளும், வீட்டில் ஊர்ந்து செல்லும் எறும்புகளும் அடங்கும்), தனது குடும்பம் என்ற ஐந்து பேரையும் போற்றுவது இல்வாழ்வானின் தலையாய கடமை’ என்கிறார்.
‘அதிதி தேவோ பவ’ என்று வேதம் சொல்கிறது. இதற்கு ‘விருந்தாளி என்பவர் இறைவனுக்கு சமம்’ என்று பொருள். முன் காலத்தில், நாம் உண்பதற்கு முன்பாக வாசல் திண்ணையில் சிறிது நேரம் உட்கார்ந்து, யாராவது விருந்தாளிகள் அல்லது வழிப்போக்கன் வருகிறார்களா? என்று பார்த்து விட்டே உணவருந்த செல்வார்கள். அப்படிப்பட்ட பிரதிபலன் பார்க்காது அன்னதானம் செய்பவர்களை இறைவன் வணங்குகிறார்.
தருண அக்னிஹோத்ரி
முன் காலத்தில், ஏழு வயதில் பூணூல் போட்டவுடன் அந்தணச் சிறுவர்கள் ‘சமிதாதானம்’ என்று, தினமும் அக்னி வளர்த்து சமித்துக்களை நெய்யுடன் அக்னியில் ஆகுதி கொடுப்பார்கள். குருகுலம் முடித்து வீட்டுக்கு வந்தவுடன் இளைய பருவத்திலேயே அவர்களுக்குத் திருமணமும் நடந்துவிடும். பின்னர் அவர்கள் தினமும் ‘ஔபாசனம்’ என்ற அக்னி காரியத்தைச் செய்து வருவர். இதை தவிர ‘அக்னிஹோத்ரம்’ என்ற அக்னி காரியம், சூரியனை உத்தேசித்து சரியாக சூரியன் உதிக்கும் காலத்திலும், அஸ்தமனம் ஆகும் காலத்திலும் செய்யப்படுவதாகும். இதை எல்லோரும் செய்துவிட முடியாது. தனது தந்தை ஒரு அக்னிஹோத்ரியாக இருந்தால் மட்டுமே, தானும் அக்னிஹோத்ரம் செய்ய முடியும். இப்படிப்பட்டவர்கள் காணக்கிடைப்பது அபூர்வம். இப்படித் தவறாமல் செய்துவருவோரையும் இறைவன் வழிபடுகிறார்.
வேதாந்த வித்
வேதங்கள் நான்கு. அதன் முடிவில் இருப்பது உபநிஷத் (வேத+ அந்தம்=முடிவு). அதை உணர்ந்தவர்கள் வேதாந்திகள். ‘அஹம் பிரம் மாஸ்மி’, ‘தத்வம் அஸி’ போன்ற ஞான உணர்வு படைத்தவர்கள். வேதாந் தத்தில் நாட்டம் ஏற்பட வேண்டும் என்றால், பலகோடி ஜென் மங்களில் புண்ணியம் செய்து இருக்க வேண்டும். உலக விஷயங்களை துறந்து, வேதாந்த விஷயங்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்து வேதாந்த சிந்தனையிலேயே வாழ்வை கழிப்பவனே உண்மையான வேதாந்த வித். அந்த வேதாந்திகளையும் கிருஷ்ண பரமாத்மா வணங்குகிறார்.
சந்திர சகஸ்ர தர்சீ
சிவனுடைய தலையில் இருப்பது மூன்றாம் பிறைச் சந்திரன். அதை மாதம் தோறும் அமாவாசைக்குப் பின்னர் மூன்றாம் நாளில் காணலாம். அடுத்த முறை காண 29 நாட்கள் காத்திருக்க வேண்டும். இப்படி ஆயிரம் முறை காண, 81 ஆண்டு கள் பிடிக்கும். அப்பொழுது அவர்கள் ‘சதாபிஷேகம்’ செய்து கொள்வார்கள். அப்படி ஆயிரம் பிறை கண்ட அதிசய சிகாமணிகளையும், கண்ணபிரான் வணங் குவார். இந்த பிறைச் சந்திரனைக் காணும் வழக்கம் பல மதங்களிலும் இருக்கிறது. ஒருவர் ஆயிரம் முறை சந்திரனைக் காண வேண்டுமானால், ஆயிரம் தடவை சிவனை நினைத்திருக்க வேண்டும்.
மூன்றாம் பிறை சந்திரனை வழிபட நினைப்பவர்கள், ‘மேகம் மறைக்கிறதே என்ற கவலையில் சந்திரனைக் காண சிவபெருமானை துதித்து நிற்பார்கள். இன்னும் சிலர் தங்களது இஷ்ட தெய்வத்தையும், குலதெய்வத்தையும் வணங்குவார்கள். அப்படிப்பட்டவர் களையும் கிருஷ்ணன் வணங்குகிறார்.
மாஸோபாவாசீச
மாதம் தோறும் இரண்டு ஏகாதசிகளிலும் உபவாசம் இருப்பவர். அந்த நேரங்களில் உணவருந்தாமல் இருக்கும் முறையை ஒழுங்காக கடைப்பிடிக்க வேண்டும். சுத்த உப வாசம் என்பது நிர்ஜலமாக (தண்ணீர் கூட பருகாமல்) இருப்பது. அப்படி இருக்க முடியாதவர்கள் தண்ணீர் மட்டுமே பருகி உபவாசம் இருக்கலாம். எப்படியானாலும் மாதந்தோறும் இரண்டு முறை உபவாசம் இருப்பவர் களை கண்ணன் வணங்குவான். ஆனால் அப்படி உபவாசம் இருப்பவர்கள் மிகவும் குறைவு தான்.
பதிவ்ரதா
‘பதிவிரதை’ என்பதற்கு கற்புக்கரசிகள் என்று பொருள். இப்படிப்பட்டவர்களை வணங்கும் முறை நம் நாட்டில் எப்போதுமே உண்டு. சாஸ்திரத்தில் சொல்லபட்ட எல்லா விஷயங்களையும் மூன்று வகையில் அனுஷ்டிக்க வேண்டும். அவை மனோ, வாக், காயம் என்பதாகும். இவற்றை தமிழில் உண்மை, வாய்மை, மெய்மை என்கிறோம். இந்த மூன்று உறுப்புகளாலும் வேறு ஒரு ஆடவனை நினைக்காது, கணவனை மட்டுமே தெய்வம் போல் கருதுபவர்களே ‘பதிவிரதை’ ஆவர்.
அப்படிப்பட்ட கற்புக்கரசிகளால் எந்த இயற்கை சக்தியையும் கட்டப்படுத்த முடியும். எதையும் எதிர்த்து போரிட முடியும். ஆனால் அவர்கள் அதை எளிதில் பிரயோகிக்கக் மாட்டார்கள்.
அசோகவனத்தில் சீதையைக் கண்ட அனுமன், ‘தாயே! உங்களைக் காணாமல் ராமன் தவிக்கிறார். என்னுடன் வாருங்கள். அடுத்த நிமிடமே உங்களை ராமபிரானிடம் சேர்க்கிறேன்’ என்றார்.
அதைக் கேட்ட சீதை சிரித்தாள். ‘என் கற் பின் ஆற்றலால் ஈரேழு உலகங்களையும் எரிக் கும் சக்தி எனக்கு உண்டு. ஆனால் கண வனின் ‘வில்’ ஆற்றலுக்கு இழுக்கு உண்டாக் கும், எதையும் செய்ய மாட்டேன்’ என்றாள்.
‘எங்கு பெண்கள் மதிக்கப்படுகிறார்களோ, அங்கு தெய்வம் வாழும். எங்கு பெண்கள் மதிக்கப்பட வில்லையோ, அங்கு என்ன நல்லது செய்தாலும் அதற்குப் பலன் இல்லை’ என்கிறது மனு சாஸ்திரம். மேலும் ‘மரியாதைக் குறைவாக நடத்தப்பட்ட பெண்கள், சாபம் இட்டால் அந்தக் குடும்பம் அடியோடு அழிந்து போகும். தந்தை, கணவன், மைத்துனன், சகோதரர் ஆகியோருக்கு அதிர்ஷ்டம் வேண் டுமானால் அவர்கள் பெண்களை மதிப்போடு நடத்த வேண்டும்’ என்றும் சொல்கிறது.
இப்படியெல்லாம் பாராட்டப்பட்ட பதிவிரதைகளைத் தான் கண்ணன் வழிபாடு செய்கிறான்.